TNPSC தேர்வில் கேட்கப்பட்ட தமிழ் வினாக்கள் பகுதி 1
ASSISTANT TRAINING OFFICER (STENOGRAPHY- ENGLISH) & JUNIOR TECHNICAL ASSISTANT (TEXTILE DEPARTMENT) IN
TAMIL NADU EMPLOYMENT TRAINING SUBORDINATE SERVICE & TAMIL NADU GENERAL SUBORDINATE SERVICE
DOE : 05/10/2023 FN & AN AND 06/10/2023 FN
1➤ இரு வினைகளின் பொருள் வேறுபாடு
சீரிய - சீறிய
(A) கோபம் கொண்ட - பெருமை பெற்ற
(B) சிறுமை கொண்ட - பெருமை பெற்ற
(C) அளவில் குறைந்த - வடிவில் குறைந்த
(D) பெருமை பெற்ற - கோபம் கொண்ட
2➤ இரு வினைகளின் பொருள் வேறுபாடு
ஈந்தாள் - ஈன்றாள்
(A) கொடுத்தாள் - பெற்றெடுத்தாள்
(B) பெற்றெடுத்தாள் - கொடுத்தாள்
(C) கேட்டாள் - கொடுத்தாள்
(D) கண்டாள் - கேட்டாள் கொண்ட
3➤ பொருள் வேறுபாடு அறிக.
பொழிகின்ற - பொலிகின்ற
(A) தருகின்ற - சிறந்து விளங்குகின்ற
(B) செல்கின்ற - வருகின்ற
(C) வாங்குகின்ற - விற்கின்ற
(D) தாக்குகின்ற - தாங்குகின்ற
4➤ சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :
'வென்றதைப் பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்'
(A) பரணி பகைவரை ஆகும் இலக்கியம் வென்றதைப்பாடும்
(B) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்
(C) இலக்கியம் ஆகும் வென்றதைப் பரணி பாடும்
(D) பாடும் இலக்கியம் வென்றதைப் பரணி ஆகும்
5➤ சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :
(A) கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்
(B) கழுத்து உயிரெழுத்து இடம் பிறக்கும் ஆகும்
(C) உயிரெழுத்து கழுத்து ஆகும் பிறக்கும் இடம்
(D) உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்
6➤ அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்:
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
(A) அள்ளல் அரக்காம்பல் வாயவிழ பழனத்து
(B) பழனத்து அரக்காம்பல் வாயவிழ அள்ளல்
(C) அரக்காம்பல் அள்ளல் பழனத்து வாயவிழ
(D) வாயவிழ பழனத்து அரக்காம்பல் அள்ளல்
7➤ அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
காருகர், ஓவியர், பாசவர், ஓசுநர், சிற்பி
(A) ஓவியர், ஓசுநர், காருகர், பாசவர், சிற்பி
(B) காருகர், பாசவர், சிற்பி, ஓசுநர், ஓவியர்
(C) ஓசுநர், ஓவியர், காருகர், பாசவர், சிற்பி
(D) ஓசுநர், ஓவியர், காருகர், சிற்பி, பாசவர்
8➤ அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(A) ஈதல், ஊக்கம், ஏது, ஒளவை
(B) ஊக்கம், ஒளவை, ஏது, ஈதல்
(C) ஈதல்,ஊக்கம், ஒளவை, ஏது
(D) ஏது, ஈதல், ஒளவை, ஊக்கம்
9➤ ‘ஒறுத்தல்’ – வினையாலணையும் பெயர் காண்க
(A) ஒறுத்தினேன்
(B) பொறுத்தல்
(C) ஒன்றுதல்
(D) ஒறுத்தார்
10➤ ‘மலை’ என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்க
(A) மலைந்து
(B) மலைந்த
(C) மலையா
(D) மலையும்
11➤ வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயரை எழுதுக
’கொடு’
(A) கொடுத்தான்
(B) கொடுத்த
(C) கொடுத்தல்
(D) கொடுத்தவன்
12➤ வந்தனன் – வேர்ச்சொல்லை எழுதுக
(A) வருக
(B) வந்து
(C) வா
(D) வருவாய்
13➤ வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக
’வருக’
(A) வா
(B) வரு
(C) வந்து
(D) வருகிறார்
14➤ ஒரு பொருள் தரும் பல சொற்கள்
’நிலவு’
(A) மதி, அறிவு
(B) மாதம், பிறை
(C) திங்கள், சந்திரன்
(D) நிலா, அறிவு
15➤ ஒரு பொருள் தரும் பல சொற்கள்
’அடிவகை’
(A) தாள், தண்டு, கோல்
(B) சுவை, கொம்பு, கொப்பு
(C)இலை, தோகை, ஓலை
(D) துளிர், முறி, குருத்து
16➤ ஒரு பொருள் தரும் பல சொற்கள்
உறைக்கிணறு, ஊருணி, அகழி, அணை
(A) நீர்நிலை
(B) ஊர் வகை
(C)கொடி வகை
(D) கடல் வகை
17➤ ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்
அமைதியான _________ தேவை.
(A) உரக்கம்
(B) துரக்கம்
(C) உறக்கம்
(D) துறக்கம்
18➤ இலை, இளை, இழை - ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக
(A) செடியின் இலை, மெலிந்து போதல், நூல் இழை
(B) மெலிந்து போதல், செடியின் காம்பு, செடியின் இலை
(C) நூல் இழை, செடியின் இலை, மெலிந்து போதல்
(D) மெலிந்து போதல், நூல் இழை, செடியின் இலை
19➤ பரவை, பறவை - ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக
(A) வானில் பரப்பது, எருது
(B) சிங்கம், கடல்
(C) கடல், புள்
(D) ஆண்மயில், கடல்
20➤ ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக
’டிமாண்ட் டிராப்ட்
(A) காசோலை
(B) பணவோலை
(C) வரைவோலை
(D) கடன் அட்டை
21➤ ’வீடு எங்குள்ளது’ என்ற வினாவிற்கு ‘இப்பக்கத்தில் உள்ளது’ என்று கூறுவது
(A) சுட்டு விடை
(B) மறை விடை
(C) நேர் விடை
(D) ஏவல் விடை
22➤ சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக
சோறு _______
(A) உண்
(B) தின்
(C) பருகு
(D) சாப்பிடு
23➤ சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக
1. குதிரைத் தாண்டியது
2. குதிரை தாண்டியது
3. வரும்படி சொன்னான்
4. வரும்படிச் சொன்னான்
(A) 1 மற்றும் 3
(B) 2 மற்றும் 4
(C) 2 மற்றும் 3
(D) 1 மற்றும் 4
24➤ மரபுப்பிழைகள் ஏற்புடைய ஒலி மரபினைத் தேர்க
’ஆடு’
(A) முழங்கும்
(B) பிளிறும்
(C) கதறும்
(D) கத்தும்
25➤ குலைவகை – பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
(A) கொத்து
(B) அளியல்
(C) தாறு
(D) அலகு
26➤ பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
நீர்நிலைப் பெயட் அல்லாத்து
(A) இலஞ்சி
(B) கேணி
(C) கூவல்
(D) கோட்டி
27➤ பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
(A) பால் - பசு
(B) எருது - உழவு
(C) காளை - வண்டி
(D) ஆடு - வண்டி
28➤ இடும்பை – எதிர்ச்சொல் தருக
(A) வறுமை
(B) இன்பம்
(C) துன்பம்
(D) சோம்பல்
29➤ அணுகு – எதிர்ச்சொல் தருக
(A) பழகு
(B) தெளிவு
(C) விலகு
(D) துணிவு
30➤ ’நீருலையில்’ – பிரித்து எழுதுக
(A) நீரு + உலையில்
(B) நீர் + இலையில்
(C) நீர் + உலையில்
(D) நீரு + இலையில்
31➤ செயல் + இழக்க என்பதனை சேர்த்து எழுதுக
(A) செயலிழக்க
(B) செயல்இழக்க
(C) செயஇழக்க
(D) செயலிலக்க
32➤ சரியான விடையைத் தேர்க
(A) விண் + உண்டு = விண்ணூண்டு
(B) பண் + அழகு = பண்ணழகு
(C) நூல் + அகம் = நூற்பகம்
(D) விண் + அழகு = விற்பழகு
33➤ ’பெருங்கடல்’ – பிரித்து எழுதுக
(A) பெரு + கடல்
(B) பெருமை + கடல்
(C) பெரிய + கடல்
(D) பெருங் + கடல்
34➤ முத்தமிழ் – பொருந்தாதச் சொல்லை கண்டறிதல்
(A) இயற்றமிழ்
(B) இசைத்தமிழ்
(C) நாடகத்தமிழ்
(D) வளர்த்தமிழ்
35➤ சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு
நெல்லையப்பர் கோவில் _______ உள்ளது?
(A) எவை
(B) எது
(C) யாது
(D) எங்கு
36➤ பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக
மாடுகள் இப்பொழுது புல் _______
(A) மேய்ந்தன
(B) மேய்கிறது
(C) மேய்கின்றன
(D) மேய்கின்றோம்
37➤ பொருத்தமான காலம் கண்டறிக
(A) கண்மணி நேற்று பாடம் படித்தாள் (நிகழ்காலம்)
(B) கண்மணி பாடம் படிக்கிறாள் (நிகழ்காலம்)
(C) கண்மணி நாளை பாடம் படிப்பாள் (இறந்தகாலம்)
(D) கண்மணி இன்று படிக்கிறாள் (எதிர்காலம்)
38➤ சரியான இணையைக் கண்டறிக
(A) விண் + மீன் = விண்மான்
(B) தமிழ் + மொழி = தாய்மொழி
(C) நீதி + நூல் = நீதிநூல்
(D) மணி + மாலை = மணிமேகலை
39➤ சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக
பரம்_____
(A) பரை
(B) பறை
(C) குறை
(D) முறை
40➤ எழுத்து வழக்கு கண்டறிதல்
என்னுடைய பல் உழுந்திடுச்சு
(A) விளந்து விட்டது
(B) வில்ந்து விட்டது
(C) விழுந்து விட்டது
(D) விலைந்து விட்டது
41➤ எழுத்து வழக்கு கண்டறிதல்
ஒடம்பு
(A) உடும்பு
(B) உடம்பு
(C) ஊடம்பு
(D) உயிர்
42➤ எழுத்து வழக்கு கண்டறிதல்
மாம்பழம் சாப்ட்டியா
(A) மாம்பழம் சாப்பிட்டாயா
(B) மாம்பழம் சாப்பிடு
(C) மாம்பழம் சாப்பிடாயா
(D) மாம்பழம் தின்கிறேன்
43➤ பொருள்களை எண்ணும் இடங்களில் _________ வரும்.
(A) காற்புள்ளி (,)
(B) அரைப்புள்ளி (;)
(C) முக்காற்புள்ளி (:)
(D) முற்றுப்புள்ளி (.)
44➤ சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
(A) முத்தமிழ் இயல் இசை நாடகம்.
(B) முத்தமிழ் : இயல், இசை, நாடகம்.
(C) முத்தமிழ், இயல், இசை, நாடகம்.
(D) முத்தமிழ், இயல் இசை நாடகம்.
45➤ சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
(A) ”நூல் பல கல்”, என்பர் பெரியோர்.
(B) திருக்குறள் அறம்; பொருள்; இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
(C) திரு.வி.க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது.
(D) நூலகத்தின் பயன் அறிவோம்: அறிவு வளம் பெறுவோம்.
46➤ ”பைம்பொழில்” – என்ற ஊர்ப் பெயரின் மரூஉவைக் கண்டறிக.
(A) பொழிச்சலூர்
(B) பம்புளி
(C) பையனூர்
(D) பொழிலூர்
47➤ ”பூவிருந்தவல்லி” – என்ற ஊர்ப் பெயரின் மரூஉவைக் கண்டறிக.
(A) பூந்தர் தோட்டம்
(B) பூவிருந்தம்
(C) பூந்தமல்லி
(D) பூ வல்லி
48➤ பொருத்துக.
a) செக் (1) பற்று அட்டை
b) டிமாண்ட் டிராஃப்ட் (2) காசோலை
c) டிஜிட்டல் (3) மின்னணு மயம்
d) டெபிட் கார்டு (4) வரைவோலை
(A) 3 1 2 4
(B) 1 2 3 4
(C) 2 4 3 1
(D) 4 3 2 1
49➤ ‘எஸ்கலேட்டர்’ – தமிழ்ச் சொல்லை எழுது
(A)மின்தூக்கி
(B) மின் ஏணி
(C) மின்படி கட்டு
(D) இயங்கு படிகட்டு
50➤ ‘ஆச்சரியம்’ – தமிழ்ச் சொல்லை எழுது
(A)பூரிப்பு
(B) எக்களிப்பு
(C) வியப்பு
(D) மகிழ்ச்சி

Post a Comment