இலக்கிய சொற்களுக்கு சரியான பொருளை தேர்வு செய்யும் பொருட்டு இப்பகுதி வைக்கப்பட்டுள்ளது.
சொற்களுக்கு ஏற்ப பொருள் தரப்பட்டிருக்கும். பொருத்தமாக ஆராய்ந்து பொருள் உணர்ந்து விடை தேர்வு செய்ய வேண்டும்.
பெரும்பாலும் பாடப்புத்தகத்தில் உள்ள செய்யுள் அடிகளின் சொற்களே வினாவாக அமைகிறது. அதன் அடிப்படையில் இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
1. கடல் - பெளவம், பரவை, ஆழி, முந்நீர், ஆர்கலி, சலதி, அருணவம், மகோததி, வாரணம், புணரி, வாரிதி
2. கப்பல் - கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்
3. சூரியன் - ஞாயிறு, எல், உதயன், பரிதி, கிரணம், கிரணமாலி, ஆதவன், கதிரவன், பகலோன், ஆதித்யன், மாலி, வெய்யோன், இரவி, பாஸ்கரன்
4. உலகம் - பார், பதலம், அகிலம், மேதினி, புவனம், ஊழி, படி, வையம், வையகம், ஞாலம், தரணி, புவனம், காசினி
5. மேகம் - கொண்மூ, கொண்டல், மஞ்சு,முகில், எழிலி, புயல், செல்
6. மலை - மேரு, வரை, கல், வசி, கிரி, வெற்பு, பொருப்பு, வசி, சிகரி, கோடு, குன்றம், குவடு, சலம், அசலம், சைலம், பூதரம், மாதிரம், உச்சி, ஏதன்
7. மாலை - ஆரம், தொடை, தார், அலங்கல், கோதை
8. போர் - செரு, அமர், சமர், சமரம்
9. குதிரை - புரவி, அசுவம், பரி, இவுளி, வயமா, துரங்கம், சடிலம், கந்தருவம், கோணகம், கந்துகம், குந்தம், பாடலம்
10. மூங்கில் - வேய், பணை, இருசு, கழை, சந்தி, வேரல்
11. தாமரை - கமலம், முண்டகம், முளரி, பதுமம், பங்கயம், கஞ்சம், வெளவம்
12. பாம்பு - பணி, இரும்பை, அரவம், அரா, உரகம், பன்னகம், பாந்தள்
13. பெண் - நங்கை, மங்கை, பேதை, மாது, அணங்கு, மடவார், காரிகை, வனிதையர், அங்கனை, மின்னார்
14. கிளி - கிள்ளை, சுகம், தத்தை, அஞ்சுகம், அவந்திகை, பலாசனம்
15. வண்டு - சுரும்பு, அராபதம், அறுபதம்
16. காற்று - வளி, கால், மாருதம்
17. எமன் - நமன், கூற்றம், கூற்றுவன்
18. அழகு - வனப்பு, கவின், எழில், ஏர், அம், சந்தம், பொலம், முருகு
19. செல்வம் - திரு, ஆக்கம், பொருள், நிதி
20. தேவர் - இமயவர், அமரர், வானவர், பன்னவர், அண்டர்
21. குற்றம் - புரை, மறு, வழு, வசை, ஏதம்
22. துன்பம் - இடும்பை, இன்னல், இடர், இடுக்கண், அல்லல், விழுமம், புன்கண், துன்பு, நோய், பிணி, நடலை, பருவரல், உறாஅமை
23. வஞ்சனை - சலம், நடலை, அவகடம், படிறு
24. உண்டான் - புசித்தான், அயின்றான், மாந்தினான்
25. ஆடை - உடுப்பு, உடுக்கை, உடை, கலிங்கம், துகில், அறுவை
26. பகைவர் - செறுநர், செற்றார், மாற்றார், தெவ்வர்
27. விருப்பம் - வெஃகல், வேட்கை

Post a Comment